தஞ்சாவூர் மாவட்டம் கீழ் குறிஞ்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
விக்ரமம் பகுதியை சேர்ந்த ராதிகா தனது 9 வயது மகன் மோனிஷை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
கீழ் குறிஞ்சி அருகே சென்றபோது முன்னால் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தை ராதிகா முந்த முயன்றுள்ளார். அப்போது விதமாக எதிரே வந்த விக்கேஷ் என்பவரின் வாகனம் மீது ராதிகா சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ராதிகா, மோனிஷ், விக்னேஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.