நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக கீழ்நாடுகாணி பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்பட பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் செல்லும் சாலையில் கீழ்நாடுகாணி பகுதியில் கனமழை காரணமாக சாலையில் சுமார் 50 மீட்டர் தூரம் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடம் வாகனங்களை இயக்குமாறு நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.