கன்வர் யாத்திரையில் முதல்வர் யோகியின் உத்தரவுக்கு அகில இந்திய முஸ்லீம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வின் முழு ஆதரவு வழங்கியுள்ளார்.
கன்வார் வழித்தடங்களில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்களின் பெயர்களை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி அறிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, அகில இந்திய முஸ்லீம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வின், இந்து-முஸ்லிம் மோதல்களைத் தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும் முதல்வர் யோகி முடிவு எடுத்துள்ளார் எனவும், மலிவான புகழுக்காக அகிலேஷ் யாதவ் இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.