பிரதமர் மோடியை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘டுவிட்டர்’ என்று முன்பு அறியப்பட்ட, தற்போதைய ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி 2009ல் இணைந்தார். அதனை கட்சி தொடர்பான அறிவிப்புகளை வெளியிடவும், பொதுமக்களுடன் உரையாடவும் பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் எக்ஸ் வலைத்தளத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடிக்கு, எலான் மஸ்க், தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அதிகம் பின்பற்றப்படும் உலகத் தலைவராக உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.