ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
குத்துச்சண்டை வீராங்கனையான பிரீத்தி பன்வர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
பயிற்சியின்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால், 3 நாட்களாக பயிற்சி மேற்கொள்ள இயலாமல் சிகிச்சையில் உள்ளார். இதேபோல நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் லவ்லீனா போர்கைனும், முதுகுத் தண்டு வலியால் ஓய்வு பெற்று வருகிறார்.