டெல்லிக்கு சென்று திரும்பிய ஆளுநர் ரவியை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாஜக மாநிலத் தலைவர் ஆண்ணாமலை சந்தித்தார்.
5 நாள் பயணமாக டெல்லி சென்ற ஆளுநர் ரவி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவரை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் நிகழ்ந்த இந்த சந்திப்பின்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.