கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு அருகே கனரக லாரி மோதிய விபத்தில் காரில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குலசேகரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், தனது மனைவி பத்மஜா, மகன் விஷ்ணு ஆகியோருடன் மீனச்சல் பகுதியில் உள்ள கோயிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.
கக்கோட்டுவிளை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பின்னால் வந்த கனரக லாரி, காரின் பின்பகுதியில் மோதியது. இதில் அவர்கள் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.