திருச்சி ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயில்களில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பெருமாளை தரிசித்துவிட்டு தாயார் சன்னிதியிலும் எல்.முருகன் வணங்கினார்.
அதனைத்தொடர்ந்து சமயபுரம் கோயிலுக்கு சென்ற எல்.முருகன், மாரியம்மனையும் தரிசனம் செய்தார்.