சென்னை எழும்பூரில் மின்கட்டண உயர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் மின் கட்டண உயா்வைக் கண்டித்தும் அதனை வாபஸ் பெற வலியுறுத்தியும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடந்த 23 மாதங்களில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் போராட்டத்தின்போது அரசு வழங்கிய மின்விசிறி, தொலைக்காட்சியை உடைத்ததாக அன்புமணி ராமதாஸ் மற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.