தூத்துக்குடியில் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் 30 பெண்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதூர் பாண்டியாபுரத்தில் மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் நேற்றிரவு ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
அப்போது நிறுவனம் முழுவதும் அமோனிய வாயு பரவியதையடுத்து பணியில் இருந்த 30 பெண் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் தனியார் நிறுவன வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.