நீலகிரியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தின் சூழல் சுற்றுலா 3 நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் சுழல் சுற்றுலா மூலமாக வனவிலங்குகளை வாகனத்தில் சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று முதல் 22ம் தேதி வரை சுழல் சுற்றுலா மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.