தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
இன்னம்பூரை சேர்ந்த விவசாயி மாரியப்பன், தனது நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலரான மதியழகனை அணுகியுள்ளார். அப்போது அவரிடம் 3 ஆயிரம் ரூபாய் மதியழகன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாரியப்பன் புகாரளித்த நிலையில் ரசாயனம் தடவிய பணத்தை மதியழகனிடம் கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதனைத்தொடர்ந்து 3 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை மதியழகன் வாங்கியபோது அவரை காவல்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர்.