இயக்குனராக அறிமுகமாகி தற்போது வில்லனாக தமிழ் திரையுலகில் கோலோச்சி வருகிறார் நடிப்பு அசுரன் என போற்றப்படும் எஸ்.ஜே. சூர்யா. அவரது திரையுலக பயணம் பற்றி தற்போது பார்ப்போம்.
காய பட்ட சிங்கத்தோட காற்று அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும். இந்த பழமொழிக்கு சரியா சூட் ஆகுற ஒரு ஆள் தான் எஸ்.ஜே.சூர்யா.
நடிக்க ஆச பட்டு வந்த எஸ்ஜே சூர்யா, பாக்யராஜ் கிட்ட வேல பாக்க வாய்ப்பு கிடைக்கிறது. இயக்குநர் வசந்த் கிட்ட ஆசை படத்துலையும், இயக்குநர் சபாபதி கிட்ட சுந்தரபுருஷன் படத்துலையும் உதவி இயக்குநரா வேல செய்யுறாரு. ஒரு கட்டத்துல சில படங்களுல கொஞ்சம் கொஞ்சம் சீன்ஸ் நடிக்க உல்லாசம் படத்துல உதவியாளராக வேலை செய்யும் போதே அஜித்கிட்ட கதை சொல்லியிருக்காரு. அஜித்துக்கும் அந்த கத பிடித்துவிட்டது. அது தான் வாலி.அஜித்துக்கு நெகடிவ் ரோல் செட் ஆகும்ன்றது வாலிக்கு பிறகு தான் மற்ற இயக்குநர்கள் கண்டுபிடிக்க ஆரம்பிச்சாங்க.
சண்டைக்குள்ள ஆளமா இருக்குற அன்பு அந்த காதலர்களுக்கு தான் தெரியும்ன்றதுக்கு உதாரணமா குஷி அமஞ்சது. இன்னோ வர இந்த படம் க்யூட்டான இளம் ஜோடிகளுக்கு எடுத்துக்காட்டாக தான் இருக்கு.
நியூ, அன்பே ஆருயிரே, திருமகன், வியாபாரின்னு ஹூரோவா நடிச்சாலும் பெருசா எடுபடல. அதுக்கு பின்ன கொஞ்சம கொஞ்சமா படத்துல கெஸ்ட் அப்பியரன்ஸ் கேமியோவா வருஷத்துக்கு ஒரு படம் பன்னிகிட்டு இருந்தாரு எஸ்.ஜே சூர்யா.
எஸ்ஜே சூர்யா கேமியோ அப்பியரன்ஸ்
9 பாவனைகளை ஒரே நேரத்துல என்னால பன்ன முடியும். ஸ்கிரீன்ல நான் வந்தா போதும் மொத்த ஆடியன்சும் என்ன பாக்கனும், இது தான் ஒரு நடிகனுக்கு அழகு அப்படின்றத இறைவி படத்துல நிருப்பிச்சாரு சூர்யா
இறைவி
இறைவிக்கு பிறகு ஸ்பைடர், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லைன்னு அடுத்தடுத்து நடிக்க வேற லெவெல் பேன்ஸ் கிடைக்கிது சூர்யாவுக்கு
ஸ்பைடர், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லைக்கு பிறகு என்ன ஆயிருச்சுன்னா எஸ்ஜே சூர்யா பேசிற டையலாக் எல்லாம் ஹிட். இல்ல அப்படி சொல்ல முடியாது என்ன பேசுனாலும் ஹிட். ரியாலிட்டியான லைப்புக்கு ஏத்த மாதிரியான டையலாக்கா இருக்குற நால பக்கா சூட்.
மாநாடு, வதந்தி
மாநாடுக்கு பிறகு தமிழ் சினிமா ஓட மித் எப்படி ஆகிருச்சுன்னா முக்கியமான ஹூரோ நடிக்கிறத தாண்டி அந்த ஹூரோவுக்கு வில்லன்னா எஸ்ஜே சூர்யா நடிச்சா படம் ஹிட்டுன்ற மாதிரியான சூழலுக்கு கொண்டு வந்திட்டாரு
ஜிகர்தாண்டா
ரைட்டு இனி வரும் காலத்துல எஸ்ஜே சூர்யா இல்லாத படங்கள பாக்கிறது ரொம்ப கஷ்டம். 1, 2 ஆச்சு 2, 3 ஆச்சு 3 4 ஆச்சுன்ற மாதிரி ஒரு வருஷத்துக்கு அத்தன படங்கள கைவசமா வெச்சிட்டு இருக்காரு சூர்யா. அட இத சொல்ல மறந்துட்டேங்க சில்லுக்கு சில்லுக்க பத்தி தெரியாத 2கே கிட்ஸ கூட திரும்பி பாக்க வெச்சது இந்த டையலாக்கு தான்.
வந்தான் நடிச்சா படம் ஹிட்டு…. வந்தான் நடிச்சா படம் ஹிட்டு…. வந்தான் நடிச்சா படம் ஹிட்டு…. இந்த நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவ பொருத்தவர மச்சி ஊன் காட்டுல மல…..