உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேர்வு மையங்கள் மற்றும் நகரம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்வு மையம் மற்றும் நகரம் வாரியாக சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்குள் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று மாணவர்களின் பெயர்களை மறைத்து மதிப்பெண்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டன. நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.