பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்துக்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 50 ஆயிரமாக இருந்தது. தற்போது பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகை 24 கோடியே 4 லட்சத்து 58 ஆயிரத்து 89 ஆக உள்ளது.
கடந்த 2017-இல் 96.47 சதவீதமாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, 2023-ஆம் ஆண்டில் 96.35 சதவீதமாக குறைந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.