கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொறியாளர் அலுவலகத்தில் சாம் செல்வராஜ் என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
ஒப்பந்ததாரர்களிடம் சாம் செல்வராஜ் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின்பேரில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சாம் செல்வராஜ் லஞ்சம் வாங்குவதை கண்ட அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடமிருந்த 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.