கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் தனியார் நிதி நிறுவனத்தில் அவசரகால ஒலி திடீரென ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பசுபதிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மணப்புரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் ஊழியர்கள் பணி முடிந்து சென்ற நிலையில், தீ விபத்து மற்றும் கொள்ளை சம்பவம் நிகழும் போது ஒலிக்கப்படும் அலாரம் ஒலித்தது.
இதனால் அருகில் குடியிருப்பவர்கள் அச்சமடைந்து ஊழியர்களுக்கு தகவலளித்தனர். அதன் பேரில் நிதி நிறுவன ஊழியர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக அலாரம் ஒலித்தது தெரியவந்தது.இதனையடுத்து அலாரத்தை ஊழியர்கள் நிறுத்தினர்.