மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மதுபோதையில் கடைகள், தெருவிளக்குகளை சேதப்படுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிம்மேலி கிராமத்தில் இரவு நேரங்களில் கடைகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வந்துள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் குற்றசம்பவங்களில் ஈடுபட்டது விக்னேஷ், கமல்ராஜ் மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.