குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் வகோடியா சாலையில் உள்ள பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்தார்.
பள்ளியின் முதல் தளத்தில் அமைந்துள்ள 7-ஆம் வகுப்பு சுவர் மதிய உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுவரை ஒட்டி நின்ற மாணவர் ஒருவர் கீழே விழுந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, பள்ளியில் சுவர் இடிந்து விழுந்தபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின.