ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, சாலையோரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்று கொண்டிருந்த 2 காட்டு யானைகளை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி வனத்திற்குள் விரட்டினர்.
தேவர்மலை கிராமத்தில் இருந்து பர்கூர் செல்லும் சாலையின் ஓரத்தில், இரண்டு காட்டுயானைகள் நின்றுகொண்டிருந்ததால், அவ்வழியே செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.