கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணை 110 அடியை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை 110 அடியை எட்டியுள்ளது.
மேலும், அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் எந்த நேரமும் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் நிலை உள்ளது.
இதனால், ஆழியார் நகர், அம்பராம்பாளையம் மற்றும் ஆனைமலை பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.