மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்க தேச அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.