பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர தமிழக அரசு தயாரா?! - அண்ணாமலை கேள்வி
Oct 10, 2025, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர தமிழக அரசு தயாரா?! – அண்ணாமலை கேள்வி

Web Desk by Web Desk
Jul 21, 2024, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர தமிழக அரசு தயாரா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,

முதலமைச்சர் அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தில் உள்ளது.

விலைவாசி உயர்வு என்பது தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது 17.5% வேலை வாய்ப்பு இன்றி இருக்கிறார்கள். அதை விட்டுவிட்டு காலை உணவு திட்டத்தில் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பேன் அம்மா உணவகத்தில் உணவு ருசி பார்ப்பேன். என முதலமைச்சர் புகைப்படம் எடுத்து வெளியிட்டாலும் மக்கள் விலைவாசி உயர்வை மறப்பதாக இல்லை முதலில் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும்.

மக்களுக்கு தேவை சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு இதையெல்லாம் முதலமைச்சர் செய்யாமல் புகைப்படம் எடுத்து வெளியிடுவது நாடகமாகத்தான் பார்க்கிறோம் இதை ஆக்கபூர்வமாக பார்க்கவில்லை.

அம்மா உணவகத்தில் உள்ள உணவுகளை தான் அமைச்சர்கள் சாப்பிட வேண்டும் என அறிவிப்பு வெளியிட வேண்டும் முதலமைச்சர் அதை விடுத்து விட்டு இரண்டு பருக்கை எடுத்து ருசி பார்த்துவிட்டு இதில் தரம் இருக்கிறது என எப்படி முதலமைச்சர் கூற முடியும் அப்படி உண்மையாக அம்மா உணவு ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றால் தலைமைச் செயலகத்தில் அம்மா உணவு தான் அனைவருக்கும் வழங்கப்படும் அமைச்சர் பெருமக்கள் அதைத்தான் உணவருந்த வேண்டும்.

அரசு நிகழ்ச்சிகளிலும் அம்மா உணவகத்தில் இருந்து தான் உணவு வரும் என முதலமைச்சர் கூறினால் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
மற்றபடி இது மக்களின் கோபத்தை மறைப்பதற்கான நாடகமாக தான் இதை பார்க்கிறோம்.

பாஜக தான் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிக்கப் போகிறார்கள் என புரளியை கிளப்பி விட்டதாக திமுக கூறுவது குறித்து கேட்டபோது

உதயநிதி அவர்கள் துணை முதலமைச்சர் என அவர்கள் கட்சிக்காரர்களே பேசினார்கள் முதலமைச்சர் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்கிறார்கள் அதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் என பத்திரிகைகள் வெளியிட்டது. ஆனால் தமிழக மக்கள் அதை யாரும் ரசிக்கவில்லை தொடர்ந்து மீடியாக்களில் கொடுத்து சோதனை செய்து பார்த்தார்கள் இதை மக்கள் ரசிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி இதை கிளப்பி விட்டு விட்டார்கள் என கூறினார்கள்.

நான் எங்காவது கூறினேனா அல்லது எனது கட்சியை சார்ந்தவர்கள் யாராவது அடுத்த துணை முதலமைச்சர் என கூறினார்களா? எங்கள் மீது பழி போட்டு புரளியை கிளப்பி விட்டார்கள் பாரதிய ஜனதா கட்சி பரப்பியது என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு கர்நாடகாவிற்கும் நமக்கும் ஏழு ரூபாய் வித்தியாசம் அனைத்து லாரிகளும் அங்கு தான் டீசல் நிரப்புகிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் ஐந்து ரூபாய் நான்கு ரூபாய் விலை குறைப்போம் என கூறியவாறு குறைக்க வேண்டும்.

அதை குறைக்கவில்லை முதலில் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் டீசல் பெட்ரோல் விலை குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு உரிமை இல்லை பாஜக முதல் ஆட்சியின் பொழுது பெட்ரோல் டீசல் ஜி எஸ் டிக்குள் கொண்டு வருவதற்கு தயாராக இருக்கிறோம்.

ஜிஎஸ்டி என்பது எல்லா மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் சேர்ந்து தான் முடிவு எடுக்க முடியும் இதில் வாக்களிக்கும் முறை கிடையாது ஜிஎஸ்டியில் இதுவரையில் அனைத்து நிதி அமைச்சர்களும் சேர்ந்து ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழகத்தின் நிதி அமைச்சர் தயாராக இருந்தால் நாங்கள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவோம் ஆனால் அவர்கள் கூற மாட்டார்கள் ஏனென்றால் இவர்களுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை.

இவர்கள் கூறியவாறு ஐந்து ரூபாய் நான்கு ரூபாய் விலையினை குறைத்துவிட்டு பேசட்டும் நாங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் குறைத்துள்ளோம்.

மாநிலங்கள் மாநிலங்கள் கேட்டுக்கொண்டால் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரபடும் என மத்திய நிதி அமைச்சர் கூறியது பாரதிய ஜனதா கட்சி ஆளுகின்ற அனைத்து மாநிலங்களும் தயார் என்று தான் அர்த்தம் ஏனென்றால் நிதி அமைச்சர் அவர் விருப்பப்படி கூற மாட்டார்.தமிழக தமிழக நிதி அமைச்சர் தயாரா என கேட்டுள்ளார்.

மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் பொழுது தலைவராக நீங்கள் தொடர்வீர்களா என கேட்டபோது, இது கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும் விரைவில் கட்சி இதைப் பற்றி பேசும்.

ஆர்எஸ்எஸ் தலைவர் தமிழகம் வருகை பற்றி கேட்டபோது, நமது ஆர் எஸ் எஸ் இன் தலைவராக இருக்கும் மோகன் பகவத் சென்னை வந்துள்ளார்கள் பத்திரிக்கையில் படித்தேன்.

ஆர்எஸ்எஸ் பேரியக்கம் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை நடக்கும். இதில்  ஆர்.எஸ் எஸ் தலைவர் கலந்து கொள்வார்கள் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும்.

ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்கள் எல்லாம் அதில் கலந்து கொள்வார்கள் நாளை சென்னையில் நடக்க இருக்கிறது. அந்த விழாவிற்காக மோகன் பகவத் ஐயா வந்திருப்பதாக நான் பத்திரிகைகளில் படித்தேன்.

அதேபோல் அவர்கள் பல கருத்துக்களை இந்தியாவில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர் எல்லா மனிதர்களையும் சந்திப்பது வழக்கம் அதே போல் தான் தமிழகத்தின் ஆளுநரையும் சந்திப்பதாக நான் பார்க்கிறேன்.

மின்கட்டணம் உயர்வு குறித்து கேட்டபோது, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி நான்கு இடங்களில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறது இவை அனைத்தும் மிகப்பெரிய மாநாடு போல் நடக்கும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தின் மின் உயர்வு, சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் இருப்பது இரண்டையும் மையப்படுத்தி பொதுமக்களை பங்கு பெறச் செய்து ஒரு மாநாட்டை போல் மக்களைக் கொண்டு வந்து அதில் நாள் முழுவதும் நாங்கள் பேச இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் நடக்கும் கண்டன போராட்டமாக இல்லாமல் ஒரு நாள் முழுவதும் நடக்கும். எங்கிருந்து இந்த பொய் வாக்குறுதிகள் வெளியாகிறது ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதை பற்றி தெளிவாக அந்த போராட்டத்தில் பேச இருக்கிறோம்.

இதனை ஒருங்கிணைக்க மாவட்டத்தின் துணைத் தலைவர் கரு.நாகராஜன் பொறுப்பேற்று இருக்கிறார். தொடர்ந்து பத்திரிக்கையில் அது பற்றி விளக்கம் அளிப்பார்.

அதானி சென்னைக்கு வந்த பொழுது முதலமைச்சரின் மருமகன் அவர்களை சந்தித்துள்ளார் அவர்கள் இல்லை என்று கூறினால் நான் புகைப்படம் வெளியிட தயார்.

அதேபோல் அம்பானி வீட்டில் திருமணத்திற்கு தான் இல்லை என்றால் தாலியே கட்ட மாட்டார்கள் என்பது போல் பதறிப்போய் அம்பானி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டார். உதயநிதி ஸ்டாலின். ஓடுன வேகத்தை பார்த்தால் பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளப் போகிறாரா என சிந்திக்க தோன்றியது ஆனால் அவர் அம்பானி திருமணத்திற்கு சென்றுள்ளார்.

இதுவரையில் அம்பானி அதானியை தவறாக பேசி அரசியல் செய்து கொண்டிருந்தார்கள் ஆனால் ஒரே வாரத்தில் மருமகன் அதானியையும் மகன் அம்பானியையும் சந்தித்துள்ளார்.

மேயர் அவர்கள் தன்னுடைய இருப்பிடத்தை காட்டிக் கொள்வதற்காக ஏதாவது பேசித்தான் ஆகவேண்டும். மேயரின் வேலை என்ன தமிழ்நாட்டில் முதலமைச்சர் வந்தால் வண்டியின் மேல் ஏறி சைடில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது மேயர்களுடைய வேலை அதனால் தான் தமிழக வரலாற்றில் இரண்டு மேயர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

நான் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காகத்தான் மேயர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகம் திமுக அதிமுகவை தாண்டி வேறு களத்திற்கு வந்துவிட்டது.

இன்று அரசியல் மாறிவிட்டது இன்று மாற்றத்தை நோக்கி தமிழகம் வெற்றி நடை போடுவதற்கு தயாராக இருக்கிறது. வேறு அரசியல் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். மக்கள் புதிய கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க தயாராக இருக்கிறார்கள்.

இப்போது புதிய அரசியல் வேண்டும் என்று நினைக்கிறார்கள் அதனால் கண்டிப்பாக இவையெல்லாம் காணாமல் போகும் எனக்கூறி சென்றார்.

Tags: Is Tamil Nadu government ready to bring petrol diesel price under GST limit?! - Annamalai question
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் : சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

Next Post

பெண்ணின் முகத்தில் பலமாக தாக்கிய முதியவர் கைது!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies