ஊழலை நிறுவனப்படுத்தி அதன் ஊற்றுக்கண்ணாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திகழ்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மகா விகாஸ் கூட்டணியை அவுரங்கசீப் ரசிகர் மன்றத்துடன் ஒப்பிட்டு, தேசத்தின் பாதுகாப்பை அவர்களால் உறுதிப்படுத்த முடியாது என்று விமர்சித்தார்.
அவுரங்கசீப் ரசிகர் மன்றத்தின் தலைவராக உத்தவ் தாக்கரே திகழ்வதாகவும், மறைந்த பால் தாக்கரேயின் சிந்தனையை மறந்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவு அமைப்புடன் இருப்பதற்காக உத்தவ் தாக்கரே வெட்கப்பட வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
பால்பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பால், கடந்த பத்தாண்டுகளில் ஒரு கிலோ பால் பவுடர் கூட இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், அடுத்த 5 ஆண்டில் ஒரு கிராம் கூட இறக்குமதி செய்யப்படாது என்றும் அமித் ஷா கூறினார்.