அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் சேர அனுமதிப்பதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
அரசு ஊழியர்கள் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின் போது 1966 நவம்பரில் விதிக்கப்பட்ட தடையை, பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் நீக்கியுள்ளது.
இது குறித்து பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மாளவியா X பதிவில்,
58 ஆண்டுகளுக்கு முன்பு, 1966 இல், RSS நடவடிக்கைகளில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான உத்தரவை மோடி அரசு திரும்பப் பெற்றுள்ளது.
ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநில அரசுகள், அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைக்கும் கட்டுப்பாடுகளை ஏற்கனவே நீக்கிவிட்டன எனத் தெரிவித்துள்ளார்.