உதகையில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. அதேபோல் கேரளா, கர்நாடகாவிலும் தொடர்ந்து மழை பெய்தது.
இந்நிலையில், உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கர்நாடக பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.