தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை நுங்கம்பக்கத்திலுள்ள தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் அலுவலகத்திற்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வருகை தந்தார். அவருக்கு நிர்வாகிகளும், ஊழியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் அலுவலகத்தில் குத்து விளக்கை ஏற்றி வைத்தார். பின்னர் அவர், செய்தி அரங்கம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். ஆர்எஸ்எஸ் தலைவரின் வருகை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.