அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டால், அவரை வீழ்த்துவது எளிது என குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிபர் ட்ரம்ப், அதிபர் தேர்தலில் ஜோ பைடனை விட கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிதாக இருக்கும் என கூறியுள்ளார்.