கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மலப்புரம் மாவட்டம், பாண்டிக்கோடு சேர்ந்த சிறுவனுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது தேசிய வைரலாஜி நிறுவனம் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிறுவனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து சிறுவனின் உடல் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வழிமுறைகளின் படி அவரது உடல் மருத்துவ துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் அடக்கம் செய்யப்பட்டது.