மகளிர் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 110 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.