நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருவதாகவும், இவ்விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை எனவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நீட் விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த 7 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் கசிந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறினார்.
நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ் அரசே அரசியலுக்காக அதனை எதிர்ப்பதாகவும் தர்மேந்திர பிரதான் விமர்சித்தார். நீட் விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை எனவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தர்மேந்திர பிரதான் கூறினார்.
மேலும், மக்களின் ஆதரவு இருக்கும்போது ராகுல்காந்தியின் நற்சான்றிதழ் தனக்கு தேவையில்லை எனவும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.