திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே போதைப்பொருள் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கையாக வட்டக்கானல் பகுதியில் சுற்றுலாத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஏராளமான காட்டேஜ்களில் சோதனையிட்ட அதிகாரிகள் கஞ்சா, மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதை பயன்படுத்திய 24 பேரை காவல்துறயினர் கைது செய்தனர்.