நீலகிரி மாவட்டம், உதகையில் சூறாவாளி காற்றால் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
உதகை, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை சாலையில் விழுந்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் பாதுகாப்புக் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதகையில் மரங்கள் வாகனங்கள் மீதும் மரங்கள் விழுந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மரங்களை ப்புற்றப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.