நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலின் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் விமரிசையாக தொடங்கியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் காரையாறு பகுதியில் சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நடைபெற்ற கால்நாட்டு வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.