நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு தலா 70 லட்சத்து 85 ஆயிரம் வேலைவாய்ப்பை வரும் 2030 வரை ஆண்டுக்கு உருவாக்க வேண்டுமென பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்திய பொருளாதாரம் குறிப்பாக வேளாண் சாரா துறையில், போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் நடப்பு வேலைத்திறன் 56 கோடியே 50 லட்சமாக இருப்பதாகவும், அதில் 45 சதவீதத்துக்கு மேல் விவசாயம் பங்கு வகிப்பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல சேவைத் துறை 28.9 சதவீதமும், கட்டுமானத் துறை 13 சதவீதமும், உற்பத்தி துறை 11.4 சதவீதமும் அங்கம் வகிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி துறையில் நிலவும் வாராக்கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் குறைந்த வேலைவாய்ப்பு காணப்படுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.