பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படவிருந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் 4 பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.