கரீபியன் கடற்கொள்ளையர்கள் கதைக்களத்தில் உருவாகும் தி பிளஃப் திரைப்படத்தில் நடித்து வரும் பிரியங்கா சோப்ராவின் கெட்டப் இணையத்தில் கசிந்துள்ளது.
அப்புகைப்படத்தின் மூலம் அவர் கடற்கொள்ளையரைப் போல சிகை அலங்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தி பிளப் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முன்னதாக ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா, படப்பிடிப்புக்கு திரும்புவதற்காக திருமணத்துக்கு பிந்தைய நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.
அவர் தனது பிறந்தநாளைக் கூட பிளஃப் படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.