ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு 2.66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார். முத்ரா கடன் 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு 10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் அறிவித்துள்ளார். ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு 2.66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.