உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பட்ஜெட்டில் அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி-யில் மத்திய அரசு, மாநில அரசு, நுகர்வோர் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் செல்போன் உதிரி பாகங்கள், சார்ஜர் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆக மொத்தம், உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 9 ஆக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாகவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.