சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில், கடன் உத்தரவாத திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எம்எஸ்எம்இ நிறுவன உரிமையாளர்கள் கடன் சுமையில் சிக்குவதை தவிர்க்கும் நோக்கில் கடன் உத்தரவாத திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன விண்ணப்பதாரர்களுக்கு தலா 100 கோடி ரூபாய் வரை சுயநிதி கடன் உத்தரவாதம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதேபோல முத்ரா திட்டங்களுக்கான உச்ச வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.