வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தாமதமானால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதிய வருமானவரித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மூன்று லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்ட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து ஒரு ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
7 லட்சத்து ஒரு ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை 10 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்து ஒரு ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை 15 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 12 லட்சத்து ஒரு ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை 20 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வரி 30 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. புதிய வருமான வரித் திட்டத்தில் 2 அம்சங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் நான்கு கோடி சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.