எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமேஷ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஷ்வரம் மீனவர்கள் மீது தொடர் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் இலங்கை கடற்படையை கண்டித்து கடந்த 2 வாரமாக மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டம் முடிந்து மீண்டும் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களுடைய 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான 9 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.