கேரளாவில் நிபா வைரல் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்த நிலையில் தமிழக – கேரள எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தார். இதனையடுத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நீலகிரியில் உள்ள தமிழக – கேரள எல்லைப்பகுதிகளான கீழ்நாடுகாணி, தாளூர் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.