மத்தியபிரதேசத்தின் கர்கோன் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் மாயாதேவி என்பவர் சாப்பிட்ட சாக்லேட்டில் செயற்கை பற்கள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கார்கோனில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சாக்லேட்டுகள் வாங்கிய கடையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.