முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி ஏமாற்றுப் பேர்வழிகள் பணம் பறித்ததை வீடியோ ஆதாரத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், பாகிஸ்தான் சைபர் குற்றவாளிகள் தனது புகைப்படத்தை பயன்படுத்தி இந்தியர்களிடம் பணம்பறிக்க முயற்சி செய்கிறார்கள் எனவும், விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற வீடியோ அழைப்பு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.