மத்திய அரசு பட்ஜெட் அறிவித்துள்ள நிலையில் ஒரு ரூபாயில் வரவு, செலவு என்ன என்பது குறித்து பார்க்கலாம்…
ஒரு ரூபாயில், ஓய்வூதியம் 4 பைசாவும், மாநில வரி பங்கீடிற்கு 21 பைசாவும், நிதிக்குழு செலவினங்களுக்கு 9 பைசாவும், மத்திய துறை திட்டங்களுக்கு 16 பைசாவும், பாதுகாப்புத்துறைக்கு 8 பைசாவும் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அந்த ஒரு ரூபாயில் மத்திய அரசு ஆதரவு திட்டங்களுக்கு 8 பைசாவும், மானியங்களுக்கு 6 பைசாவும், வட்டியாக 19 பைசாவும், மற்ற செலவினங்களுக்கு 9 பைசாவும் செலவிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு ரூபாயில் வருமான வரி மூலம் 19 பைசாவும், கலால் வரியால் 5 பைசாவும், நிறுவன வரியால் 17 பைசாவும், சரக்கு மற்றும் சேவை வரி மூலம் 18 பைசாவும், சுங்க வரியால் 4 பைசாவும் வருவாயாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடன் உள்ளிட்ட வருவாய் மூலம் 27 பைசாவும், கடன் அல்லாத மூலதன ரசீது மூலம் 1 பைசாவும், வரி அல்லாத வருவாய் ரசீது மூலம் 9 பைசாவும் வருவாயாக கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.