முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே!- அண்ணாமலை
Mar 19, 2026, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே!- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 24, 2024, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதலமைச்சர்? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,

நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளது.

ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.

நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு, கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?

மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதலமைச்சர்?

தொகுதியின் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 5 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தற்போது முதலமைச்சர் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: If the Chief Minister decides to boycott the meetingit is the people of Tamil Nadu who will suffer!- Annamalai
ShareTweetSendShare
Previous Post

வலைதளங்களில் வைரல் 27 மாவட்டங்களை புறக்கணித்த ஸ்டாலின்?

Next Post

மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு பலன்கள் என்ன? அம்பலமான உண்மை!

Related News

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies