நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியன் தளவாய் குடியிருப்பு பகுதியில் கரடி புகுந்து அட்டகாசம் செய்துவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பில் கரடி புகுந்து அங்குள்ள மரத்தில் ஏறி அமர்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் அட்டகாசம் செய்துவந்த கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தது குறிப்பிடத்தக்கது.