டெல்லியில் கடந்த 2020-இல் நடைபெற்ற வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட உமர் காலித் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த விவகாரத்தில் உபா வழக்கின்கீழ் உமர் காலித் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.