தஞ்சையில் மின்கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழவாசல் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார்.
இதில் மின்சார கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.